விநாயகரை எந்த திசையில் வைத்து வணங்குதல் கூடாது...?

முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கியப் பின் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவது வழக்கம். விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும்.

விநாயகரின் தும்பிக்கையானது எப்போது இடது புறமுள்ள அவரின் தாயார் கெளரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம்  கிடைக்கும்.
 
விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
 
விநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது. கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும். வீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாயகரை வைக்கப் கூடாது. ஏனெனில் அது துரதிஷ்டத்தை உண்டாக்கும்.
 
உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும். அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்