ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி - கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும். நவகிரகங்களிலே இவர் கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறான்.
நீதிமான் இவனே, செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம் என்ற இவர் காலம் வரும்போது தான். இவர் பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் யாரும் தப்ப இயலாது. ஒருவனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை சனிபகவானுக்கு உரியது.
ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு. இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது. ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார்.