காசியில் அமைந்துள்ள அஷ்ட பைரவ கோவில்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
திங்கள், 18 ஏப்ரல் 2022 (15:30 IST)
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள்.
1. அசிதாங்க பைரவர்: அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார்.
2. ருரு பைரவர்: அஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.
3. சண்ட பைரவர்: அஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் துர்க்கை கோவிலில் அருள் செய்கிறார்.
4. குரோத பைரவர்: அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார்.
5. உன்மத்த பைரவர்: அஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார்.
6. கபால பைரவர்: அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார்.
7. பீக்ஷன பைரவர்: அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார்.
8. சம்ஹார பைரவர்: அஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.