சில செய்யக்கூடாத ஆன்மிக குறிப்புக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:09 IST)
செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.


பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.

இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.

விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.

மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது. இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்