குறிப்பாக நம் கோயில்களில் காணப்படும் தல விருட்சங்களில் நம் வாழ்க்கையின் ஆரோக்கியம் மறைந்திருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தை வாழ்விப்பதற்காக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை காடுகளிலும், மலைகளிலும் கண்டுபிடித்து அவற்றை எடுத்து வந்து, மக்கள் அடிக்கடி வந்து செல்லக்கூடிய கோயில்களில் நட்டுவைத்து அவற்றையும் இறைவனோடு சேர்த்து வணங்க வைத்தார்கள்.
கோயிலில் தல விருட்சமாக இருக்கும் மரத்தின் இலையையோ, அல்லது பட்டையையோ அல்லது வேரையோ வாங்கி வந்துகசாயம் போட்டுக் குடித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டார்கள். இவ்வளவு ஏன், அந்த தலவிருட்சங்களுக்கு அடியில் விழுந்து வணங்கும்போது அங்கே வீசும் காற்று அந்த மரத்தின் மருத்துவ குணத்தை சுமந்து வந்து நம் மீது படர்ந்தாலே நோய் விடுபடும் என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தார்கள்.