பணப் பிரச்சனையை எளிதில் தீர்க்கும் பரிகாரம் பற்றி தெரிந்துகொள்வோம்!!

என்னதான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும் அதை மிச்சப்படுத்த முடியவில்லையே என்ற கவலை அனைவருக்கும்  இருக்கும்.
* கிழக்கு திசை எப்போதும் இந்திரனுடைய திசையாகும். மேற்கு திசை யோகங்களுக்கும், வடக்கு திசை குபேர யோகம் தரும் திசையாகும்.  தெற்கு திசை எப்போதும் ஆத்ம சாந்தி தரும்.
 
* சிவனை கும்பிடுபவர்களுக்கு கஷ்டம் வரும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. சிவனை கும்பிடுபவர்கள் முதலில் நந்தியிடம் ஒரு  விண்ணப்பத்தை கொடுத்து விட்டுதான் செல்லவேண்டும்.  
 
* பூஜை அறையில் ஒரு விளக்கு கிழக்கு நோக்கியும், அந்த விளக்கின் இடது புறம் ஒரு விளக்கு மேற்கு திசையை நோக்கியும் விளக்கு ஏற்ற வேண்டும். அதன் பிறகு கிழக்கு நோக்கி எரியும் விளக்கின் வலதுபுறம் ஒரு விளக்கை வடக்கு திசையை பார்த்தவாறு ஏற்றவேண்டும்.
* கிழக்கு பார்த்த விளக்கு - வீட்டின் ஆற்றலுக்காகவும், மேற்கு பார்த்த விளக்கு - படிப்பிற்காகவும், வாஸ்து பிரச்சனையை போக்கவும், வடக்கு பார்த்த விளக்கு - பண வரவிற்காகவும், மூன்று விளக்கையும் ஒரே நேர் கோட்டில் ஏற்ற வேண்டும்.
* ஒரு சிறிய மண் பானையில் சில்லறை காசுகளை நிரப்பி, தென்மேற்கு மூலையில் அதாவது குரேப மூலையில் வைத்துவிடவேண்டும். அதுவும் அதன் வாய்புறம் கிழக்கு முகமாக வைக்கவேண்டும். இதனை புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் இதனை செய்யலாம். வியாழக்  கிழமைகளில் செய்வது உத்தமம். இதை செய்வதால் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்