கரூர் - ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா

சனி, 23 பிப்ரவரி 2019 (13:04 IST)
தென் திருப்பதி என்றழைக்கப்படும் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி - அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் தேவியருடன் 5 முறை உலா வந்தார்.
கரூர் அடுத்துள்ள தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலின் மாசி மகத் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெறும். மேலும்., தென் திருப்பதி என்றழைக்கப்படும் இந்த ஆலயமானது குடவறை கோயிலாகவும் விளங்குகின்றது. இந்நிலையில்  அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணர் ஆலயமாசி மகத் திருத்தேர் திருவிழா மற்றும் தெப்ப திருவிழா நிகழ்ச்சி வெகுவிமர்சியை ஆக  நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி துவங்கிய இந்த மாசி மகத்திருவிழாவினை தொடர்ந்து தினந்தோறும் சுவாமிகளுக்கு ஒவ்வொரு வாகன வீதி  உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 20 ம் தேதி திருத்தேர் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து., மாசி மாத தெப்பத்திருவிழாவானது, வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ  தேவி, பூ தேவி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஊர்வலம் போல் தெப்பத்தினை அடைந்து ஆங்கே,  அலங்கரிக்கப்பட்ட பல வண்ண விளக்குகளினால் சுழ்ந்த தெப்பத்தில், சுவாமிகள் எழுந்தருளி, பட்டாச்சாரியார் தீபாராதனை காட்ட தெப்பத்தில், ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறையாகிய வெங்கடரமண சுவாமி 5 முறை வலம் வந்தார்.
 
ஆங்காங்கே பலவித வண்ண மலர்கள் மற்றும் பலவித வண்ண விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் பெருமாள் பவனி வந்தார்.  இந்நிகழ்ச்சியினை காணவும், பெருமாளை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தினை சூழ்ந்து அருள் பெற்றனர்.
 
மேலும்., இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

சி.ஆனந்தகுமார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்