தைப்பூச நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த கலிவெண்பா போன்றவற்றை மாலை வரை படிக்கலாம். வேளைக்கு செல்வோர் கந்தனை காலையிலேயே பூஜித்து மனதார வணங்கிவிட்டு நாள் முழுவதும் கந்தனை நினைத்து “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே வேலைகளை செய்யலாம்.
காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலை இன்று வழிபடுவது நல்லது. காலை மாலை என இருவேளையும் இந்நாளில் கோவிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.
முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது.