வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. தினமும் பூஜை அறையில் மந்திர உச்சாடனம் செய்யவேண்டும். இவை வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டுவரும்.
பூஜை அறையை வழிபடுவதற்கும், தியானம் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடம் பற்றாக்குறையின் காரணமாக அலமாரியை பூஜை அறையாக பயன்படுத்துவர் இதில் எந்த தவறும் இல்லை. அவ்வாறு பயன்படுத்திய பிறகு பூஜை அறையை மூடியே வைக்கவேண்டும்.