தியானம் எவ்வாறு செய்வதால் பலன் கிடைக்கும்...?

பதஞ்சலி முனிவர் தன் யோகசூத்திரத்தில் “ஸ்திர ஸுகமாசனம்” என்றுதான் குறிப்பிடுகின்றார். ஆனால் ஹடயோக நூல்கள் பெரும்பாலும் வஜ்ராசனம், பதமாசனம், சித்தாசனம் போன்ற சில கிறிப்பிட்ட ஆசனங்களை சிபாரிசு செய்கின்றன.

அதேபோல வெறும்தரை, பாறை, கோரைப்  பாய், பிளாஸ்டிக் பாய், இரும்பு நாற்காலி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவைகளால் மின்காந்த இழப்பு ஏற்பட்டு, நரம்பு சம்மந்தமான  பிரச்சனைகள் உண்டாவதுடன், மன உற்சாகம் குறைவுபட்டுப் போகும். தியானத்தில் முன்னேற முடியாது.
 
தரைமேல் தர்ப்பை பாயை விரித்து, அதற்கு மேல் சருமத்தைப் போட்டு அதற்கு மேல் ஒரு துணியை மடித்து விரித்து அமர்ந்து தியானம் செய்வது நல்லது. தர்ப்பை மின்காந்த ஆற்றலை விரையமாகாமல் காப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத சில கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது. தியானம் செய்யும்போது நேராக நிமிர்ந்து உட்காருவதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தினால் இரத்தம் முதுகு வழியாக மூளையைச் சென்றடையும். இதனால் பல நன்மைகள் விளையும். நிமிர்ந்து அமராவிட்டால் இரத்தம் தடைப்படும். தியானத்தில் முன்னேற்றம்  காணமுடியாது.
 
மார்பு பகுதி நேராக இல்லாமல் இருந்தால் மூச்சு அடங்காது. இதனால் பிராணவாயு குறைபாடு ஏற்பட்டு மனம் அலைபாயத் துவங்கும். நேராக  அமராமல் எத்தனை ஆண்டுகள் தியானம் செய்தாலும், குண்டலினி சக்தியானது மேல்நோக்கி உயர் மையங்களுக்குச் செல்லமுடியாது.  அதுபோல புருவ நடுவையோ, மூக்கு நுனியயோ பார்த்து கண்கள் அசையாமல் இருந்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். சுவாசம்  கட்டுப்படும். ஆக்கினையில் ஆற்றல் அதிகரிக்கும். மனோசக்தி பெருகும் மூலாதாரத்தில் பிராண போக்குவரத்து அதிகரிக்கும்.
 
சாம்பவி, அகோசரி முத்திரை: புருவ நடுவை பார்த்தபடி செய்யும் பயிற்சி சாம்பவி என்றும், முக்கு நுனியை பார்த்தபடி செய்யும் பயிற்சி அகோசரி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. அது போலவே சின் முத்திரை முழங்கால்கள் மேல் வைத்து தியானம் செய்தால், இருதயம், நுரையீரலின் வேகமான இயக்கம் சமன் செய்யப்படும். மூச்சின் வேகமும் சமன்படுவதால் தியானம் எளிதில் வசப்படும்.
 
இடதுகை கட்டைவிரல் மூளையின் வலது அரைக்கோளத்தோடும், வலதுகை கட்டைவிரல் மூளையின் இடது அரைக்கோளத்தோடும் தொடர்பு உடையது. சின் முத்திரையில் ஆள்காட்டி விரலால் கட்டைவிரலின் அடிப்பகுதி நன்கு அழுத்தப் படுவதாலும், இரண்டு விரல்களும்  ஒன்றோடொன்று இணைந்திருப்பதாலும் மூளையின் ஒரு அரைக்கோளமும் மின்காந்த சக்திகளால் தூண்டப்படுகிரது. உடலின் இருபக்க இயக்கங்களும் சமன்படுத்தப்பட்டு மனம் எளிதில் உள்முகமாகப் பயணிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்