சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் சிறப்புக்கள்...!!

சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து  நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். 

இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை  பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது.
 
எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார்.  அதாவது மரணத்தை வெல்வார்.
 
மிருத்யுஞ்ஜய மந்திரம்:
 
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்
 
பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக. இந்த மந்திரத்தை நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்