எப்போதும் போல உங்களுடைய வீட்டில் நெருப்பு மூட்டி, அதில் சாம்பிராணி புகையை போட்டு, அதன் மேலே கொஞ்சமாக இந்த வெள்ளெருக்கன் வேர் பொடியையும் தூவி விட்டு விடவேண்டும். இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் காட்டுங்கள். இந்த வெள்ளெருக்கன் வேர் புகை வீடு முழுவதும் பரவும் போது மூலைமுடுக்குகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் கூட விலகிவிடும்.