குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017 பனிரெண்டு ராசிகளுக்கும் எவ்வாறு இருக்கும்?

குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று  காலை 9.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு  மாறுகிறார்.


 


ஆடி 18 ஆம் நாள், ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. முப்பெரும் சிறப்பு பெறும்  நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை  நாளில் அமைவதால் கூடுதல் நன்மை.
 
வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம்  ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. 
 
குருவின் அதிக கதிர்வீச்சு பெறுவது மஞ்சள். அதை நாம் புனிதமான கிழங்காக பார்க்கிறோம். பெண்களுக்கு  குருவின் சக்தி கிடைக்க வேண்டும் நல்ல தெளிந்த அறிவை பெற வெண்டும் என மஞ்சளை அதிகம்  உபயோகிக்கிறோம். குரு அருள் கிடைக்கும், இஷ்டதெய்வ அருளாசி கிடைக்க மஞ்சள் நிறத்தை அதிகம்  உபயோகிக்றோம்.
 
குருவின் மனிதர்களுக்கு தரும் முக்கியமான குணம் அன்பு, அமைதி, இரக்கக்குணம், மனிதாபிமானம், நல்  சிந்தனை, நுணுக்கமான பார்வை, நல்ல குழந்தைகள், சமூகத்தில் அந்தஸ்து ஆகியவை ஆகும். நம்ம ராசிக்கு குரு  இருந்தால் அப்போதெல்லாம் நமக்கு மேற்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பலாம். பிறப்பு ஜாதகத்தில்  குரு கெட்டிருந்தாலும் கோட்சாரத்தில் குரு ராசிக்கு நல்ல நிலையில் வரும்போது நிச்சயம் நல்ல பலனை  தருவார் அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்.
 
குருபலம் பெறும் ராசிகள்:
 
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம்.
 
ரிஷபம்
ரிஷபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார். இது குருபலமாகும். எங்கும் எதிலும் வெற்றி,  நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
 
சிம்மம்
சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார். கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம்  அதிகரிக்கும்.
 
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள்  அடைபடும். தொழில் சிக்கல் தீரும்.
 
மகரம்
மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்.  கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும். தெய்வ அருள் உண்டாகும்.
 
மீனம்
மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம். 7ல் வரும் குரு பகவான் தொழில்  சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்.
 
மேஷம்
குரு உங்கள் ராசிக்கு 9,12 ஆம் அதிபதி ராசிக்கு 6 ல் பெயர்ச்சியாகிறார். இதுவரை 5 ல் இருந்த குரு பொருளாதார  மேன்மை, குடும்பத்தில் சுப நிகழ்ச்சி போன்ற நன்மையான பலன்களை அதிகம் வழங்கியிருப்பார். அஷ்டமத்து  சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும். திறமை அறிவுக்கு ஏற்ற  அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்  தேவை.
 
மிதுனம்
உங்கள் ராசிக்கு 7,10 ஆம் அதிபதி   குரு  ராசிக்கு  4ல்  வருவது மத்திமான  பலன்களை தரும். முன்பு  இருந்த  3ம் இடத்தை விட இந்த  4  சற்று  சிறப்பான  அமைப்பு  தான், உடல் நலனில்  அக்கறை   கொள்வதும், அதிக  அலைச்சல், வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு,   பேச்சில் கவனம் கொள்வதும் அவசியம்.
 
கடகம்
உங்கள் ராசிக்கு 6, 9 ஆம் அதிபதி குரு ராசிக்கு 2ல் இருந்து ராசிக்கு 3ல் பெயர்ச்சியாகிறார். இதுவரை இருந்த 2ம் இடம் சிறந்த பலன்களை முக்கியமாக பெரும்பாலோருக்கு பொருளாதார ரீதியாக சில முன்னேற்றங்களை தந்திருக்கும். தற்போது குரு சற்று சாதகமற்ற நிலையில் இருப்பதால் செயல், புதிய முயற்சிகளில் தடை, தாமதம் இருக்கும். சகோதரர்கள்,  நன்பர்கள், அண்டை  வீட்டாரிடம் சில கருத்து வேறுபாடுகள்  ஏற்படலாம், கவனம் தேவை.
 
கும்பம்
கும்ப ராசியினருக்கு அஷ்டமக் குருவாய் வருகின்றார். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட  உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார். அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிறைய வந்து சேரும்.  காரிய தடைகள் நிறைய உண்டாகும். புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம். அவரைத் தொழுதால் பலன் கொடுப்பார்.
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார். ராசிக்கு 10ல் குரு  வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம். சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு  பணிக்கு செல்ல முயற்சிப்பர். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.வேலைப்பளு அதிகரிக்கும் காலம்  என்பதால், ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும்.
 
மீனம்
பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார். இது  குரு பலம். இதுவரை பண சிக்கல், தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது.  திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது.
 
கன்னி
கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம் இடத்தில் இருந்த குருபகவான் ஒருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து  தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள்  வரும் பொழுது புது முயற்சிகள் கைகூடும். தொட்டது துலங்கும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்