கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எங்கெங்கு எத்தனை விளக்குகள் ஏற்றவேண்டும்...?

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. 
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி,  சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற  வேண்டும்.
 
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய  உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்). 
 
கார்த்திகை தீபத் திருநாளில், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு, அனைத்து வீடுகளிலும் ஏற்றுவது வழக்கம்.
 
ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, மாலையில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு  விளக்கு ஏற்றுவார்கள்.

ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள். அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கும், சமையல் கூடத்தில் ஒரு விளக்கும், நடையில் இரண்டு விளக்கும், பின்கட்டில் 4 விளக்கும்,  திண்ணையில் 4, மாட குழியில் இரண்டு, நிலைப்படிக்கு 2, சாமி படத்துக்கு கீழே இரண்டு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இடத்தில் - 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்