என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.
வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்யவேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம். இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறவனின் பரிபூரன அருளை பெறலாம்.
தமிழகத்தில் சித்ரகுப்தனுக்கு என்று தனிக்கோயில் உள்ள ஒரே இடம் காஞ்சிபுரம். அங்கு தனிச்சன்னதியில் சித்ரகுப்தன் எழுந்தருளியுள்ளார். சித்ரா பெளர்ணமி அன்று அங்கு அங்கு விஷேச ஆராதனைகள், பூஜைகள் நடக்கின்றன. காலையில் மகா அபிஷேகமும், மாலையில் திருமணமும் நடக்கிறது. சித்ரா பெளர்ணமி தோறும் இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரகுப்தனை பூஜிப்பதாக ஐதீகம்.