மிகுந்த பலன்களை வாரி வழங்கும் ஏகாதசி விரதம் !!

சனி, 12 பிப்ரவரி 2022 (13:16 IST)
'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.


இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.

ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும்.

அந்த வகையில், தை மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. சர்வ ஏகாதசி நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம்.

அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் வழங்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்