மாவிலைத் தோரணங்கள் இருக்கும் இடங்களில் துர்தேவதைகள் வாசம் செய்யாது என்பது ஐதீகம். பசுமையாகவே இருந்து அழுகாமலேயே குணம் மாறாமல், காயும் சிறப்பு மிக்க இலை மாவிலை. பூஜைகளின் போது கலச வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளும், பூஜைகளும், விசேஷங்களும் சிறப்பாக அலங்கரிக்க மாவிலைத் தோரணம் உதவுகிறது. விசேஷங்களில் மட்டும்தான் மாவிலைத்தோரணம் கட்டவேண்டுமென்பதில்லை. எளிதாக மாவிலை கிடைக்கும் பட்சத்தில் மாவிலைத் தோரணம் காய காய புதிய தோரணத்தை வாசலில் அலங்கரிக்கலாம்.
வெளியே சென்று வீடு திரும்பும் போது வெளியில் மாசுபட்ட இடங்களிலிருந்து தூசியும், புழுதிகளும், கிருமித்தொற்றும் நம் பின்னாடியே தொற்றிக் கொண்டு வீட்டுக்குள் வரும். கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை வாசலிலேயே தடுத்துவிடும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு. மிக முக்கியமாக மாவிலை கரியமில வாயுவை-கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு சுத்தமான பிராண வாயுவை ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.