* முதலில் நாம் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும். காலையில் முடியாதவர்கள், மாலை நேரத்தில் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது நல்லது.
* தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் லூசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்து தியானம் செய்ய ஒரு குட்டிப் பாயை விரித்துக் கொள்ள வேண்டும். சம்மணம் போட்டு உட்கார்ந்து, முழங்கால்களின் மேல் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்குமாறு உட்கார்ந்து, கழுத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின், கண்களை மூடி ஓரிரு மூச்சுக்களை மூக்கு மூலம் மட்டும் இழுத்து விட வேண்டும்