அட்சய திருதியை தினத்தன்று இதை செய்தாலே பலன்கள் கிடைக்கும்; அது என்ன....?

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திருதியை தினம் “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அட்சய திரிதியை என்றாலே அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

அட்சய திருதியை தினத்தன்று தங்க நகை வாங்க இயலாவிட்டாலும் அன்று நாடெங்கிலும் இருக்கின்ற புண்ணிய நதிகளில் ஏதேனும் ஒன்றில் நீராடினால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
 
மோர், இளநீர், குடிநீர் போன்றவற்றை இந்த தினத்தில் தானம் அளிப்பவர்கள் தங்களின் முன்ஜென்ம பாவங்கள் நீங்கி வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண  பெறுவார்கள். 
 
அட்சய திருதியை தினத்தன்று சிறிதளவு வெள்ளி வாங்கினால் நவகிரகங்களில் சந்திர பகவானின் அருள் கிடைக்கும். சருமநோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை போன்றவை நீங்கும். அட்சய திரிதியை நாளன்று 11 ஏழைகளுக்கு தயிர்சாதம் அன்னதானமாக அளிப்பதால் உங்களின் 11 தலைமுறைகள்  உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாமல் காக்கும். 
 
அட்சய திரிதியை தினத்தில் அன்னதானம் செய்வது மகத்தான பலனைத் தரவல்லது இந்த தினத்தில் தான் அன்னை பராசக்தி அன்னபூரணியாக சிவபெருமானுக்கு அன்னதானம் அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இந்த தினத்தில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபடுபவர்களுக்கு அவர்கள் மனதில் நினைத்த காரியங்கள்  அனைத்தும் நிறைவேறும்.
 
அட்சய திரிதியை நாளில் உணவு தானியங்களை தானம் அளிப்பவர்கள் அகால மரணம் ஏற்படுவதிலிருந்து காக்கப்படுவார்கள். இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற வறுமை நிலை நீங்கும். இந்த நன்னாளில் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு செய்யும் தான, தர்மங்கள் உங்களின் ஏழு தலைமுறைகளுக்கு புண்ணியம் சேர்ப்பதாக அமையும். இந்த தினத்தில் புத்தாடைகள் தானம் செய்வதால் நீண்ட காலமாக  இருக்கும் நோய்கள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்