பூஜைக்கு உரிய பூக்கள் எவை என்று தெரியுமா...!

மலர்களையும் அதன் தன்மையையும் பயனையும் உணர்ந்து மனநிறைவோடு,மனப்பூர்வமாகப் பயன்பாடுத்தி பூஜை செய்தால் எதிர் பார்க்கும் பலன் கிடைக்க  திருப்தி கிடைக்கும்.
செந்தாமரை: செல்வம்,தொழிலில் மேன்மை,ஆத்ம பலம்,சூரியன் அருள். வெண்தாமரை: வெள்ளை நந்தியாவட்டை,மல்லிகை,இருவாட்சி போன்ற வெள்ளை  மலர்கள் மனக்குறையை போக்கும்.மனதில் தைரியம் சேர்க்கும்.
 
தங்க அரளிமலர்கள் பெண்களுக்கு மாங்கல்யபிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாது தடுக்கும்.கிரகபீடை நீக்கும்,குரு பார்வை அருளும். சிவப்பு அரளி, செம்பருத்தி  மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமை பெறுக்கும்.
 
நீல சங்கு புஷ்பம்,நிலாம்பரம்,நீலோற்பகம் ஆகியவை அவப்பெயரை போக்கும்,தரித்திரம் நீக்கும். மன அமைதி தரும்.சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும்  ஆயுலைப்பெருக்கும்.
 
மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி, கணவன் மனைவிக்குள் அன்பையும் பெருக்கும். பாரிஜாதம், அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை  புஷ்பங்கள் சந்திரன் அருளைப்பெற்று புத்தி வலிமையைப் பெருக்கும்.தாயாரின் உடல் நலத்தையும் காப்பாற்றும்,பாசிப்பச்சை,மருக்கொழுந்து,மருவு போன்றவை  அறிவைப் பெருக்கி மன உருதியைத் தரும்,புதனுடைய நற்பார்வை அருளும்.
 
அடுக்கு அரளி,செம்பருத்தி ஞானம், கல்வி, தொழில் பெருகும்.வில்வ புஷ்பம்,கருந்துளசி புஷ்பம்,மகிழ மலர் ஆகியவை ராகு,கேது கிரகங்களின் நற்பலனைத்  தரும். பழைய புஷ்பங்களையும், மொட்டு களையும்,தூய்மை இல்லாத புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக்கூடாது.
 
விநாயக பெருமானுக்கு எருக்கம்பூ,தும்பை,செம்பருத்தி,தாமரை,ரோஜா,ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை. முருகப் பெருமானுக்கு முல்லை, சாமந்தி, ரோஜா  காந்தள், செங்காந்தள் உகந்தவை.
 
திருமாலுக்கு தாமரை, பவளமல்லி,மருக்கொழுந்து,துளசி, சாமந்தி ஆகியவை உகந்தவை.நீலசங்க புஷ்பம் பயன்படுத்தலாம்,வரலட்சுமிக்கு மடலவிழ்ந்த தாழை  மடல் மிகவும் சிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்