மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலை மீது அமர்ந்ததற்கான காரணம் என்னதெரியுமா...?

மூலமுதற் கடவுள் விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை எனலாம். பிரபலமான சில விநாயகர் கோயில்களை இங்கு தரிசிப்போம்.

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் திருச்சியின் அடையாளங்களுள் முக்கியமானது மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில். சத்திரம் பகுதியில் அமைந்துள்ள மலை உச்சியில் காணப்படும் குடைவரை கோவிலான தாயுமானவர் சிவன் கோவில் உச்சியில் உள்ளது இந்தக் கோவில்.
 
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
 
இராமன் கொடுத்த அனந்த சயன ஸ்ரீ ரங்கநாத சுவாமி விக்கிரகம் கொண்டுபோகும் வழியில் சந்தியாவதனம் செய்ய விரும்பினார் விபீஷணன். அப்பொழுது ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் உருவில் தோன்றிய பிள்ளையாரிடம் அந்த விக்கிரகத்தை சிறிது நேரம் கொடுத்துவிட்டு செல்ல, அவரோ விக்கிரகத்தை நிலத்தில் வைத்துவிட்டார். 
 
பிறகு விபீஷணனால் எவ்வளவு முயன்றும் அதனைப் பெயர்க்க முடியவில்லை. கோபங்கொண்ட விபீஷணனிடம் இருந்து தப்பி ஓடிய சிறுவன் அருகில் இருந்த மலையில் ஏறலானான். துரத்திச் சென்ற விபீஷணன் உச்சிக்குப் போனதும் சிறுவனைப் பிடித்து அவனைக் கொட்ட கையை ஓங்கவே சிறுவன் பிள்ளையாராக மாறி விபீஷணனுக்கு அருட்காட்சி கொடுத்தார். 
 
அந்த இடத்தில் பிள்ளையாரும் நிலை கொண்டார். அதுவே இன்று தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மலையேறி வணங்கும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்