தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் அல்லது உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் காலையில் குளித்து விட்டு உணவேதும் அருந்தாமல் விரதமிருந்து, அருகில் உள்ள சிவாலயத்தில் ராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
உதாரணமாக: 25 வயதுடையோர் 25 புதிய அகல் விளக்குகள் வங்கி கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியால் தீபமேற்றி மனக்குறைகளை பிரார்தனையாக அவர் முன் வைக்க வேண்டும். பின்னர் தயிர் சாதம், மிளகு சாதம் முதலானவற்றை படைத்து, அந்த பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்.
தொடர்ந்து 12 மாதாந்திர நட்சத்திர நாட்கள் அல்லது 8 தேய்பிறை அஷ்டமி திதி நாட்கள் பூஜித்து வந்தால்,கடுமையான சிரமங்கள் நீங்கி வளமான வாழ்க்கையை பைரவப் பெருமான் அருளுவார். செவ்வாய்க்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய மிக சிறப்பான நாட்களாகும்.