நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைப்பொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் விதத்தில் குளுமையான பொருட்களைப் பூஜைக்கு வைத்து வழிபடலாம்.
உக்கிர மூர்த்தியாக உக்கிர சொரூபமாகத் திகழ்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். இவரை இஷ்ட தெய்வமாக நினைத்து தொடர்ந்து வாரந்தோறும் வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர்.
இவரை சனிக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் பானக நைவேத்தியம் செய்து வணங்கி வந்தால், எட்டுத் திசைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் அகலும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு.