சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது “அமாவாசை” தினமாகும். அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெற முடியும்.
முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும் விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.
அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.