நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் !!

இறைவனின் அருளை விரைவாக பெறுவதற்கு உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம்  ஆகும்.

அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில் திருக்கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும். இதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.
 
லக்ஷ்மிக்கு உகந்தது நெய் தீபம்.நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள். குலதெய்வம் நம் வீட்டிற்குவர சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணெய்யை கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
 
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.
 
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து இருக்கும்.கிரகதோஷங்கள் விலகி சுகம் பெறலாம்.வருமானம் அதிகரிக்கும்.
 
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில், வழக்கு சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம்  ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.
 
பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசைக்காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும். வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்