சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனி மாத பௌர்ணமி அன்று மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது சிறப்பு. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.