மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நிகழ்ந்த ஆருத்ரா தரிசனம் !!

சிவபெருமானின்  "ஆருத்ரா தரிசனம்" மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் அகானிவடிவாக நின்ற நாள் என்பதால் திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்தகரமாகிறது, "ஆதிரையான்" என்று சிவனை அழைப்பர்.           இவ்விழாவைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
 
தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது  திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப் படைக்கப்படுகின்றன. 'திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.

கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு  மீண்டும் உயிர் கொடுத்தார்.
 
அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும், அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத  திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.
 
அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கோள்வோர், நடனகலையில்  சிறக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்