இந்த செடியினுடைய பெயரே பேய் மிரட்டி. இந்த செடியை பார்த்தால் பேய் மிரண்டு ஓடி விடும் என்பதும் இதனுடைய அர்த்தம். இந்த பேய் மிரட்டி செடிகளில் இருக்கும் இலைகளைப் பறித்து அந்த இலையை திரி போல சுருட்டி மண் அகல் தீபத்தில், எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய்யில் இந்த பச்சை இலையை திரியாக போட்டு, தீபம் ஏற்றினால் இந்த புகைக்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பேய் மிரட்டி செடியின் இலைகளையும் வேரையும் எடுத்து வந்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசல் படியில் தொங்கவிட்டால், வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நுழையாமல் இருக்கும். உங்களுடைய வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு பேய் மிரட்டி இலை வேர் கொண்டு தாயத்தை கூட போடலாம்.