உங்களுடைய வேண்டுதல் நன்மைக்காக இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் உங்களையே பின் தொடரும். தீவினை சூழும். எனவே எண்ணங்கள் நல்லனவாக இருக்க வேண்டும். நன்மைக்காக வேண்டிய வேண்டுதல் கட்டாயம் இதன் மூலம் நிறைவேறும். சுத்த விபூதியில் ஈச சக்தி அடங்கியுள்ளது. விபூதி தர்பையுடன் சேர்ந்து நமக்கு இறை ஆற்றலை பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.
நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் நல்லதோ, கேட்டதோ, இரண்டு காரியங்களை செய்யும் போதும் தர்பையினால் ஆனா மோதிரத்தை ஒரு சம்பிரதாயமாக அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம்.
ஹோம குண்டங்களில், யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த சடங்கையும் செய்யும்போது அதை ஏன் விரலில் ஒரு மோதிரம் போல போட்டுக் கொள்கிறோம் என்றால், அது நம்மைக் பாதுகாக்கும் சக்தியாகவே பாவிக்கப்படுவதே தர்ப்பைப் புல். தெய்வத் தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது.