கண் திருஷ்டியை போக்க உதவுமா ஆகாச கருடன் கிழங்கு...?

Webdunia
ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன.
ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது.
 
இந்த கிழங்கு கசப்புச் சுவை உடையது. இதில் உயிர்ச்சத்து அதிகம் உள்ளது எனினும் மனிதர்கள் உண்ணப்பயன்படுவதில்லை. மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு உள்ளுக்குள் கொடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
இக்கிழங்கை கண்திருஷ்டி தோஷம் நீங்கப் பயன்படுத்துவர். இக்கிழங்கினை வீடு மற்றும் கடை வாசல்களில் கட்டித் தொங்கவிடுவர். இது  முளைவிட்டு வளரும். அப்படி வளர்ந்தால் நல்லது. இல்லையெனில் கெடுதல் என்று நம்புகின்றனர். நீர் இல்லாமலேயே இக்கிழங்கு  முளைவிட்டு வளரும்.
 
இக்கிழங்கை கண்திருஷ்டி தோஷம் நீங்கப் பயன்படுத்துவர். இக்கிழங்கினை வீடு மற்றும் கடை வாசல்களில் கட்டித் தொங்கவிடுவர். இது  முளைவிட்டு வளரும். அப்படி வளர்ந்தால் நல்லது. இல்லையெனில் கெடுதல் என்று நம்புகின்றனர். நீர் இல்லாமலேயே இக்கிழங்கு  முளைவிட்டு வளரும்.
இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும்.  கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும். கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும்  ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.

இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம். அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது.
 
இந்த ஆகாச கருடன் கிழங்கு. கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம், செய்வினை போன்றவை அணுகாது. அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்