குருப்பெயர்ச்சி (2016-2017) நல்ல பலன்களை அள்ளி தந்து முன்னேற்றிடும்

வெள்ளி, 22 ஜூலை 2016 (11:50 IST)
துர்முகி வருடம் ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார்.


 
 
நவகிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவரது அருள் நமக்கு எப்பொழுதும் தேவை. அதனால்தான் நமது சான்றோர்கள் ‘குருவருள் இருந்தால்தான் நமக்கு திருவருள் கிடைக்கும்’ என்று சொல்லி வைத்திருகிறார்கள்.
 
ஆடி மாதம் 18 ஆம் நாள், ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை.
 
1. ஆடி 18
2. ஆடி அமாவாசை
3. குரு பெயர்ச்சி
 
வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18ம் தேதி 02.08.2016 செவ்வாய்க்கிழமை தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் கிருஷ்ண பட்ச அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், காலை மணி 9.23க்கு கன்யா லக்னத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 01.09.2017 வரை கன்னி ராசியில் குரு பகவான் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.
 
அப்படிப்பட்ட குருவின் பார்வையை பெறும் ராசிகள் மகரம், மீனம், ரிஷபம் ஆகியவையாகும். குரு தனாதிபதியாக விளங்கி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் மூலம், பணமழையில் நனைந்து பார்போற்றும் ராசியாக விளங்குவது விருச்சகம்.
 
கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருபார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசிகள் தனுசு, கும்பம், மேஷம். மேற்கண்ட ராசிகள் அனைத்திலும் இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை அள்ளி வழங்கப் போகிறது.
 
மற்ற ராசிகளான மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் எல்லாம் நல்ல பலன்களைப் பெர்று ஆரோக்கியமான உடல்நிலையும், அனைவரும் பாராட்டும் வாழ்க்கையும் அமைத்துக் கொள்ள இயலும். மேலும் அந்த ராசிக்காரர்கள் யோகபலம் பெற்ற நாளில் குருவிற்குரிய வழிபாடுகளை முறையாகச் செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல இயலும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்