2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : மகரம்

சனி, 14 ஏப்ரல் 2018 (12:51 IST)
பலம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
 
சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சனீஸ்வரனின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.  உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். 
கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும்  ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதோடு பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும்.  இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக  கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் சிறப்பான வாழ்க்கைச்சூழல் உண்டாகும்.  குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று குதூகலமாக காலத்தைக் கழிப்பீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். புது வீடு, வாகனம் ஆகியவைகளை வாங்குவீர்கள்.

பலவீனம்:
 
கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சரியான வெளிச்சம் உள்ள இடத்திலமர்ந்து படித்து கண்களில் குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பயணங்களின் போது கவனம் தேவை. வீண் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யும்  போது சுற்றி இருப்பவர்களின் மேல் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் நீங்களே நேரடியாக ஈடுபடுவது நல்லது.
 
மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்