விருச்சிகம் - (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப் பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த குருப் பெயர்ச்சியில் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும்.