தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞசம ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
05.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார்
26.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
விருச்சிக ராசியினரே இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும்.
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப் பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். மற்றபடி தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். அலுவலகத்தில் சகஜமான நிலை இருக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே நடக்கும். ஆனாலும் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் ஓரளவு நன்றாகவே தொடரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வியாபார வட்டாரத்தில் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அதேநேரம் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் திருப்தியடைவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி முடியும். ஆனாலும் தொண்டர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி சமுதாயத்தில் பொறுப்புமிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பெயரும் புகழும் வளரும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைப் பெறும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆனாலும் அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மற்றபடி உங்களைக் குறைசொல்லும் சக கலைஞர்கள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமையில் பங்கம் ஏற்படாத வண்ணம் கவனமாக நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். பேசும்போது அவசரப்படாமல் நிதானமாகப் பேசவும். உற்றார், உறவினர்களை கௌரவமாக நடத்தவும். மற்றபடி பண வரவுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.
விசாகம்:
இந்த மாதம் மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும்.
அனுஷம்:
இந்த மாதம் புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும்.
கேட்டை:
இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். பிச்சிப்பூ வாங்கி அருகிலிருக்கும் முருகனுக்கு மாலையாக சாத்தி வழிபடவும். மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3