தத்தாத்ரேயாவின் கோயில்!

திங்கள், 15 டிசம்பர் 2008 (15:41 IST)
இந்த வார புனிதப் பயணத்தில் இந்தூரில் உள்ள புகழ்பெற்ற தத்தாத்ரேயாவின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வர் ஆகியோரது ஒருங்கிணைந்த உருவமாக திகழ்கிறார் இறைவன் தத்தாத்ரேயா. இறைவனாகவும் அதே சமயம் குருவாகவும் திகழ்கிறார் இவர். அதனால் தான் இவரை ஸ்ரீ குருதேவதத்தா என்றும் அழைக்கின்றனர்.

இந்த தத்தாத்ரேயாவின் கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. ஹோல்கார்கள் என்ற சமுதாயம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த கோயில் சிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

webdunia photoWD
உஜ்ஜைனில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சிம்மஹஸ்தா என்ற திருவிழாவில் கலந்து கொள்வதறக்க சாதுக்களும், குருக்களும், சங்கராச்சாரியார்களும் வருவார்கள்.

இவர்களின் வருகையால் பல்வேறு தளங்களும் மத்திய இந்திப் பகுதியில் புகழ்பெற்றது. குரு நானக் இமாலி குருத்வாராவில் சுமார் 3 மாதங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று மாதங்களும், அவர் மாலையில் அங்குள்ள நதிக்குச் சென்று நதியில் நீராடிக் கொண்டிருக்கும் துறவிகளுடன் கலந்துரையாடுவார்.

தத்தாத்ரேயா மிக அதிசயமான முறையில் தோன்றினார் என்றும், அன்றைய தினத்தை தத்தா ஜெயந்தி என்று கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.

webdunia photoWD
குரு தத்தாத்ரேயாவின் பூஜையின்போது குருசரித்ரா வாசிக்கப்படுகிறது. தத்தாத்ரேயா பூமியையும், நான்கு வேதங்களையும் காப்பதற்காகவே பூமிக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படியே, பூமியைக் காக்க ஒரு மாட்டையும், வேதங்களைக் காக்க 4 நாய்களையும் அவர் அழைத்து வந்ததாகவும், அவரது திருவுருவங்களும் அப்படியே அமைக்கப்பட்டிருக்கும்.

எப்படி செல்வது

விமான மார்கமாக செல்வதாக இருந்தால் அஹில்யா விமான நிலையம் அருகில் உள்ளது. சாலை மார்கமாக செல்வதென்றால், இந்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும்.

webdunia photoWD
சாலை மார்கம் - ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.