பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள்

புதன், 23 செப்டம்பர் 2009 (15:14 IST)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள் எனற புத்தகம்.

இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் பேராசிரியர் க. செல்வராஜ். நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.200.

தேசீயத்தையும், தெய்வீகத்தையும் தனது கண்களாகக் பாவித்து வாழ்ந்தவர் தேவர். இவரது பேச்சு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைவது இவருக்கு மற்றுமொரு சிறப்பு.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டு மக்களுக்காக பணியாற்றிய இவர், பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியிலும் சேர்ந்து தேசத்திற்கு தொண்டு செய்தார்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் சுமார் 4 ஆயிரம் நாட்கள் சிறைச்சாலையில் இருந்தவர் இவர்.

1937ஆம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் நடந்த முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதில் இருந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டசபை சென்றவர்.

திருமணமே செய்து கொள்ளாமல் இந்த நாட்டையே தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்து மறைந்தவரின் வரலாற்றை படிக்க இந்த புத்தகம் உதவி புரியும் என்று நம்புகிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்