‘கடைசிப் புகையின் கல்லறை’ புத்தகம் வெளியீடு

செவ்வாய், 10 நவம்பர் 2009 (16:13 IST)
கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கடைசிப் புகையின் கல்லறை’ என்று நூலை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டார்.

webdunia photo
WD
சமூகம், சுற்றுச் சூழல், வாழ்வியல் ஆகியன குறித்து கவிஞர் ஜெயபாஸ்கர் எழுதிய கருத்தாழமிக்க கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு ‘கடைசிப் புகையின் கல்லறை’ என்ற நூல் வடிவில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, இராணி சீதை மன்றத்தில் திங்கள் மாலை நடைபெற்ற வெளியீட்டு விழாவில், நூலின் முதல் படியை நடிகரும் இயக்குனருமான சேரன் பெற்றுக் கொண்டார்.

நூலை மதிப்புரை செய்த அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கடைசிப் புகையின் கல்லறை நூலை சில பக்கங்கள் மட்டும் படித்துவிட்டு வைக்க முடியவில்லை, அதனை முழுமையாக படித்தப் பின்னரே வைக்க முடிந்தது. அந்த அளவிற்கு அதில் பொருட் செரிவு உள்ளது என்றுக் கூறினார்.

சமூகத்தின் அவலங்களை தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எடுத்துக் கூறி, அதன் தாக்கத்திலிருந்து மக்களையும், பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து ஜெயபாஸ்கர் எழுதியுள்ளவை அனைத்தும் அனைவராலும் படித்து மற்றவருக்கு எடுத்துக் கூறத் தக்கவை என்று குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.

நூல் மதிப்புரை செய்த ஓவியர் சந்தானம், இந்தப் புத்தகத்தையும் தாண்டி இன்னும் சொல்வதற்கு கவிஞர் ஜெயபாஸ்கரிடம் ஏராளம் உள்ளதென்றும், அவருடைய இலக்கியப் பணி தொடர வேண்டும் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்