உசைன் போல்ட்டின் கிண்டல் பேச்சு

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (12:47 IST)
பிரேசிலில் நாட்டில், நடக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை ஜிகா வைரஸ் தாக்காத வண்ணம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைளை பிரேசில் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.


 


இந்நிலையில், உசைன் போல்ட்டிடம் பத்திரிகையாளர் ஒருவர் ”நீங்கள் ஜிகா வைரஸிடமிருந்து தப்பிப்பதற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு, உசைன் போல்ட் “நான் ஜிகா வைரஸைப்பற்றி கவலைப்படுவதில்லை, நான் அதைவிட வேகமாக ஒடுகின்றேன், அது ஒரு போதும் என்னை பிடிக்க முடியாது” என்று கிண்டலாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்