ஒலிம்பிக் போட்டி: நீச்சலில் 3 புதிய உலக சாதனை

திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (18:38 IST)
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைப்பெற்ற நீச்சல் போட்டியில் 3 புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.


 

 
பிரேசில் நாட்டில் நடைப்பெற்று கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியில், இன்று காலை நடைப்பெற்ற நீச்சல் போட்டியில் 3 புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
 
பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் சுவீடன் வீரகங்கனை 55.48 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்டிரோக் நீச்சலில் இங்கிலாந்து வீரர் 57.13 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனை படைத்தார்.
 
பெண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை 3 நிமிடம் 56 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   

வெப்துனியாவைப் படிக்கவும்