69வது குடியரசு தின விழா - தேசியக் கொடி ஏற்றினார் ராம்நாத் கோவிந்த்

வெள்ளி, 26 ஜனவரி 2018 (10:05 IST)
டெல்லி செங்கோட்டையில் இன்றுஇ 69வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 
நாடுமுழுவதும் இன்று 69வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு விழா களை கட்டியுள்ளது.
 
குடியரசு தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் உள்ள ராஜ பாதையில் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
 
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அதேபோல், அமர்ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து மோடி மரியாதை செலுத்தினார்.
 
குடியரசு தின விழாவில் நடைபெறும் கண்கவர் நிகழ்ச்சிகளை பார்க்க ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். விழா நடைபெறும் டெல்லி ராஜ  பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். டெல்லி ராஜ பாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து ராஜ பாதையில் கண்கவர் அணிவக்கு தற்போது நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்