சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...!

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை  வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.
 
எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
 
யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான்  அடைகிறான்.
 
சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத  திருவருளைப் பெற்றவர்கள்.
 
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!
 
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ  வல்லமை படைத்தவன் நீ.
 
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் – எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிற்கட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச்  செல்.
 
நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்