நீ உன்னைப் பற்றி என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை ஆகிவிடுவாய். ஆகவே உன்னைப் பற்றி உயர்வாகவே நினை. பாவிகள் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நினைத்து சோர்ந்து போய் இருக்காதே. உன்னால் எதுவும் முடியும் என்பதை மறக்காதே!
நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் கடமைகளை, உன் சுக துக்கங்களை மறந்து நீ செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.
இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. ஆனால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.