மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்றுவிதமான இயல்புகளால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும்.
முடிவான லட்சியம் என்ற ஒன்று இல்லாமல் போனால், நாம் ஏன் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்? இன்பமாக இருப்பதுதான் மக்களின் லட்சியம் என்றால், நாம் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்ட மற்றவர்களை ஏன் துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடாது? அப்படிச் செய்வதில் இருந்து நம்மை தடுத்து நிறுத்துவதே ஒழுக்கம்தான்.