எப்பொழுதும் நேர்மையாயிரு - அ‌ன்னை

செவ்வாய், 7 ஜூன் 2011 (17:40 IST)
பாதையில் முன்னேற இது இன்றியமையாதது!

இந்தப் பாதையில் நடப்பதற்கு உனக்கு எதற்கும் தயங்காத அஞ்சாமை வேண்டும். அற்பமான, இழிவான, பலவீனமான, அருவருப்பான இயக்கமாகிய அச்சத்துடன் ஒருபோதும் உன்னைப் பற்றியே எண்ணக் கூடாது.

அசைக்க முடியாத துணிச்சல், பூரணமான நேர்மை வேண்டும், கணக்குப் பார்க்காது அல்லது பேரம் பேசாது தன்னை முழுவதுமாகக் கொடுக்க வேண்டும், ஒன்றைப் பெறும் நோக்கத்துடன் கொடுக்கக்கூடாது, பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் உன்னை அர்ப்பணிக்கக் கூடாது, உன்னுடைய நம்பிக்கைக்கு நிரூபணம் தேவைப்படக்கூடாது - பாதையில் முன்னேற இது இன்றியமையாதது - இது ஒன்றே உன்னை எல்லா ஆபத்துகளிலுமிருந்தும் பாதூக்க முடியும்.

எப்பொழுதும் நேர்மையாயிரு!

நேர்மையாயிரு,
எப்பொழுதும் நேர்மையாயிரு,
மேன்மேலும் நேர்மையாயிரு.

நேர்மையாயிருப்பதென்றால்
சிந்தனைகளில்,
மனவெழுச்சிகளில்,
புலுனுணர்ச்சிகளில்,
செயல்களில்
தனது ஜீவனின் மைய உண்மையைத் தவிர வேறு எதையும் வெளியிடாதிருத்தலாகும்.

அனைவருக்கும் அமர நிலை!

ஒருவனது கடந்த காலம் எப்படி இருந்திருந்த போதிலும், அவன் எவ்வளவுதான் தவறுகள் செய்திருந்தாலும், எவ்வளவு அஞ்ஞானத்தில் வாழ்ந்திருந்த போதிலும் அவனது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மிக உன்னதத் தூய்மை உள்ளது. அது அற்புதமான ஒரு சக்தியாக மலர்ந்து வெளிப்படலாம். தன்னுடைய கஷ்டங்கள், தடைகள், இன்னல்கள், இடையூறுகள் இவைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராமல், அந்த உன்னதத் தூய்மை மீது ஒருமுனைப்படுதல், அதைப் பற்றியே சிந்தித்தல் - இதுவே அவன் செய்ய வேண்டியதெல்லாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்