அருள் - ரமண‌ர்

வியாழன், 18 அக்டோபர் 2012 (16:54 IST)
FILE
அருள் எப்போதும் இருப்பது. கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு தண்ணீருக்காகக் கத்துகிறோம். குருவின் அருள் கிடைக்காவிட்டால் வைராக்கியம் உண்டாகாது. உண்மையை உணர முடியாது, ஆத்மாவில் வசிக்க இயலாது, ஆனால் பயிற்சி (சாதனை) அவசியம்.

அருள் நிலையானது. நமது தீர்ப்போ மாறி வருவது. குற்றம் எங்கே இருக்கிறது?

அருளின் மிக உயர்ந்த வடிவம் மௌனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.

எனக்கு வேறுபாடே இல்லை. அருள் கடலைப் போல் எப்பொழுதும் முழுவதும் நிரம்பி ஓடுகிறது. அவரவர் தம் தகுதிக்கு ஏற்ப அதிலிருந்து மொண்டு கொள்கிறார்கள். டம்ளரைக் கொண்டு வந்தவர் ஜாடி அளவு மொண்டு கொள்ள முடியவில்லையே என்று முறையிடுவதால் என்ன பயன்?

வெப்துனியாவைப் படிக்கவும்