ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஐனவரி 7ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
108 வைணவ தலங்களில் முதன்ம¨யானது திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்.
இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நேற்று இரவு 7 மணிக்கு ரங்கநாதர் மூலஸ்தனத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் விழா துவங்கியது.
பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்ற 21 நாட்கள் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் நம்பெருமாளுக்கு பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.
வரும் 7ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.