ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய நகரமாகும் தஞ்சை.
தஞ்சையைச் சுற்றிப்பார்க்க உகந்த காலம் அக்டோபர் மாதத்தில் இருந்து மார்ச் வரையிலாகும். அந்த சமயத்தில்தான் அங்குள்ள தட்பவெப்பம் அருமையாக இருக்கும்.
அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு. தரிசிக்க பிரதீஸ்வரர் கோயில், பார்க்க மாளிகை, சங்கீதா மஹால், சரஸ்வதி மஹால், படிக்க பெரிய நூலகம், கண்டு அறிய ராஜா அருங்காட்சியகம், கோயில் அருங்காட்சியகம் உட்பட ஏராளம் ஏராளம்.
தஞ்சை செல்லும் சுற்றுலாப் பயணிகள், விமானம் வழியாக செல்ல திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தஞ்சை செல்லலாம்.
ரயிலில் செல்ல வேண்டுமானால், திருச்சி, மதுரை, சென்னை, சிதம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து தஞ்சாவூருக்கு நேரடி ரயில்கள் உள்ளன.
சாலை மார்கமாக செல்ல : சிதம்பரம், கன்னியாகுமாரி, கும்பகோணம், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், திருச்சிராப்பளியில் இருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சையை சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அருகில் இருக்கும் வேளாங்கன்னி (95 கி.மீ.), கோடிக்கரை (30 கி.மீ.), பூம்புகார் (100 கி.மீ.) போன்ற இடங்களையும் பார்த்துவிட்டு திரும்பலாம்.