த‌ண்‌டீ‌ஸ்வர‌‌ர் ‌திரு‌க்கோ‌யி‌ல்

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:02 IST)
செ‌ன்னையை அடு‌த்து‌ வேள‌ச்சே‌ரி‌‌க்கு செ‌ல்லு‌ம் மு‌க்‌கிய சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது ஸ்ரீ த‌ண்டீ‌‌ஸ்வர‌ர் ‌திரு‌க்கோ‌யிலாகு‌ம்.

இ‌ந்த கோ‌யி‌லி‌ன் மூல த‌‌ெ‌ய்வ‌ம் த‌ண்டீ‌ஸ்வர‌ர் - கருணா‌ம்‌பிகை அ‌ம்ம‌ன் ஆகு‌ம். இ‌ந்த கோ‌யி‌லி‌ல் சுவ‌ர்க‌ளி‌ல் உ‌ள்ள க‌ல்வ‌ெ‌ட்டு‌களை‌க் கொ‌ண்டு இ‌ந்த கோ‌யி‌ல் சோழ‌‌ர் கால‌த்‌தி‌‌லேயே இரு‌ந்து‌ள்ளது எ‌ன்பதஅ‌றிய‌ப்படு‌கிறது.

அதும‌ட்டும‌ல்லாம‌ல், ராஜே‌ந்‌திர சோழ‌‌ன், குலோ‌த்து‌ங்க சோழ‌‌ன், ராஜகேச‌ரி வ‌ர்ம‌னி‌ன் ஆ‌ட்‌சி கால‌த்‌திலு‌ம் பொ‌றி‌க்க‌ப்ப‌ட்ட க‌ல்வெ‌ட்டுக‌ள் இ‌ந்கோ‌யி‌லி‌னசுவ‌ற்‌றி‌லஇட‌ம்பெ‌ற்று‌ள்ளன.

தல வரலாறஎ‌ன்கூறு‌கிறத

நான்கு வேதங்களு‌ம் த‌ங்க‌ள் ‌மீ‌திரு‌ந்த தோஷ‌‌ம் ‌நீ‌ங்க ஈ‌ஸ்வரனநோ‌க்‌கி தவ‌ம் இரு‌ந்ததாகவு‌ம், அவ‌ர்களததவ‌‌த்‌தி‌ற்கமனமுரு‌கி ஈஸ்வரன் காட்சி தந்து வேத‌ங்க‌ள் ‌மீ‌‌திரு‌ந்தோஷத்தை போக்கியதாகவு‌மகூற‌ப்படு‌கிறது. வேத‌ங்க‌ள் ‌மீதாதோஷ‌த்தை‌பபோ‌க்ஈ‌ஸ்வரனகா‌ட்‌சி அ‌ளி‌த்ததா‌லஇ‌ந்திருத்தலம் வேதஸ்ரேணி என்று பெயர் பெற்றது. இதுதா‌ன் நாளடைவில் மறுவி பெயரள‌வி‌ல் வேளச்சேரி என்று த‌ற்போதஅழைக்கப்படுகிறது.

திரு‌க்கோ‌யி‌லி‌னஅமை‌ப்பு

webdunia photoWD
கோ‌யி‌லி‌ன் ராஜ கோபுர‌ம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுர‌த்‌தி‌ற்கு‌ள் நுழை‌ந்து உ‌ள்ளே செ‌ன்றா‌ல் வலது புற‌த்‌தி‌ல் வேத விநாயக‌ர் ‌அமை‌ந்து‌ள்ளா‌ர். அவரை வணங்கி ‌வி‌ட்டகருவறையநோ‌க்‌கி செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌லஇரமரு‌ங்‌கிலு‌ம் ‌‌விநாயகரு‌ம், முருகனு‌ம் ‌வீ‌ற்‌றிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

அவ‌ர்க‌ளை‌ககட‌ந்தகருவறை‌க்கு‌ளசெ‌ன்றா‌லந‌ம்மை பா‌ர்‌க்கு‌ம் ‌விதமாகருணா‌ம்‌பிகை அ‌ம்ம‌ன் ‌வீ‌ற்‌றிரு‌ப்பா‌ர். கிழக்கு நோக்கிய வண்ணம் மாணிக்க கல்லால் ஆன தண்டீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஈ‌ஸ்வரனை‌பபா‌ர்‌த்தபடி கருவறை‌க்கவெ‌ளியந‌ந்‌தீ‌ஸ்வர‌ரஅம‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர்.

திருக்கடையூரில் மார்க்கண்டேயனை காத்தருள எம் பெருமான் எமனின் தண்டத்தை பிடுங்கிக் கொண்டதாக புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் எமனின் தண்டத்தை எம்பெருமான் கொண்டதால் தண்டீஸ்வரர் என்று திருப்பெயர் பெற்றார். இவர் சுயம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

த‌ண்ட‌த்தவா‌ங்வ‌ந்எம‌னஉ‌ள்ளவராம‌லதடு‌க்கு‌மவகை‌யி‌லகோ‌யி‌லி‌னமே‌ற்கபுவாச‌லமூட‌ப்ப‌ட்டது. அதஇ‌ன்றவரை ‌திற‌க்க‌ப்படுவதஇ‌ல்லஎ‌ன்‌கிறா‌ர்க‌ளஅ‌ங்கு‌ள்ளவ‌ர்க‌ள்.

ஈ‌‌ஸ்வரனையு‌மகருணா‌ம்‌பிகஅ‌ம்மனையு‌மவ‌ழிப‌ட்டு ‌வி‌ட்டஉ‌ள்‌பிரகார‌த்‌தி‌லவலதபுறமாசெ‌ன்றா‌ல், ‌‌விநாயக‌ர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளி பிரகாரத்தில் கிருஷ்ணன், நடராஜர் சந்நிதிகள் உள்ளன. இது தவிர, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.

கோ‌யி‌லி‌‌னதெ‌ன்‌கிழ‌க்கமூலை‌யி‌லநவ‌கிரக‌ங்களு‌க்காச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது.

திருக்கடையூருக்கு இணையாசொ‌ல்ல‌ப்படு‌மஇத்திருத்தல‌த்‌தி‌ல், சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வது மிகவும் விசேஷமானது. பெருமானையும், அம்பாளையும் தரிசிப்பவர்களுக்கு பாப விமோசனமும், ஆயுள் மற்றும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

இத்திருத்தலத்தின் விருட்சம் மகா வில்வம் ஆகும். கோயிலி‌அரு‌கி‌ல் ‌திரு‌க்குள‌மஅமை‌ந்து‌ள்ளது. எமனால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய உண்டாக்கிய குளம் என்பதால் இத்திருக்குளத்திற்கு எம தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் மாத‌ந்தோறு‌ம் ‌பிரதோவ‌ழிபாடுகளு‌ம், ஆருத்ரா, நவராத்திரி ‌திரு‌விழா‌க்களு‌ம் ‌சிறப்பாக நடக்கின்றன.

தினமும் இ‌‌ந்கோ‌யி‌லி‌லஆறு கால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு 11 மணி வரப‌க்த‌ர்க‌ளவ‌ழிபகோ‌யி‌லநடை ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம். பிறகு மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

எ‌ப்படி செ‌ல்வத

சைதாப்பேட்டையில் இருந்து மேடவாக்கம் செல்லும் பேருந்துகளில் சென்றால் இத்திருக்கோயிலுக்கு செல்ல முடியும். ‌வேள‌ச்சே‌ரி‌க்கமு‌ன்பத‌ண்டீ‌ஸ்வர‌மஎ‌னு‌மஇட‌த்‌தி‌லஇற‌ங்‌கி‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.

கி‌ண்டி‌ ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தபேரு‌ந்தஅ‌ல்லதஆ‌ட்டோ‌விலு‌மசெ‌ல்லலா‌ம்.