சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
பெளர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.