ப‌‌ண்ணா‌‌ரி‌ அ‌ம்ம‌ன் ‌வீ‌திஉலா!

வெள்ளி, 14 மார்ச் 2008 (17:42 IST)
ஈரோடு மாவ‌‌ட்ட‌ம், பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மா‌ர்‌ச் 25ஆம் தேதி நடக்கிறது. இதையொ‌ட்டி ச‌த்‌திய ம‌ங்கல‌ம் ‌கிராம‌ப் பகு‌திக‌ளி‌ல் அம்மன் வீதிஉலா நட‌ந்து வரு‌கிறது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் பண்ணாரியும் ஒன்றாகும். இந்த கோயிலில் ஒவ்வொறு வருடமும் தமிழ் மாதம் பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்ட அரசு நிர்வாம் பொது விடுமுறை அறிவிக்கப்படும்.

webdunia photoWD
இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் மிதிப்பது வழக்கம். இந்த வருடம் வரும் மார்ச் மாதம் 25ஆ‌ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் விழா நடக்கவுள்ளது.

மார்ச் 10ஆம் தேதி அதாவது மாசி 27 ம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மார்ச் 18ஆம் தேதி பங்குனி 5ஆம் தேதி செவ்வாய் இரவு கம்பம் சாட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

25ஆம் தேதி குண்டம் விழாவும், 26ஆம் தேதி புஷ்பரதமு‌ம், 27ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவு‌ம், 28ஆம் தேதி திருவிளக்கு பூஜையு‌ம், 31ஆம் தேதி பங்குனி ‌விழாவு‌ம் நடக்கவுள்ளது.

தற்போது அம்மன் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களில் வீதிஉலா சென்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பாரதி மற்றும் பரம்பரை அறங்காவல் குழு தலைவர் புருசோத்தம்மன் ஆகியோரது தலைமையில் அதிகாரிகள் மற்றும் அறங்காவல்குழுவினர் செய்து வருகின்றனர்.